அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளர். நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிஜி தீவுகளில் தொடர்ந்து 57 நாட்கள் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து `பார்ட்டி' படக்குழு இந்தியா திரும்பியது.