சினிமா

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் இணைந்த பிரம்மாண்ட கூட்டணி

`சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு தற்போது `களவு' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் `ஆர்.கே.நகர்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், தனது அடுத்த இன்னிங்ஸ், அதாவது வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார். அதில் முக்கிய கதாபாத்திரத்தில், சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.