சினிமா

மீண்டும் சூடு பிடித்த களவாணி-2

சற்குணம் இயக்கத்தில் விமல் - ஓவியா நடிப்பில் உருவாகி வரும் களவாணி படத்தின் இரண்டாவது பாகம் மீண்டும் துவங்கியுள்ளது. #Kalavani2 #K2

மாலை மலர்

விமல் நடிப்பில் ‘மன்னர் வகையாறா’ கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அவரது நடிப்பில் அடுத்ததாக ‘கன்னிராசி’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து, அவரது நடிப்பில் அரைடஜன் படங்களுக்கு மேல் வர இருக்கின்றன.

விமல் அடுத்ததாக இயக்குனர் எழில், இயக்குனர் சுராஜ், இயக்குனர் வசந்தமணி, இயக்குனர் மஜித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதேபோல் பூபதி பாண்டியன் இயக்கத்திலும் மீண்டும் நடிக்க இருக்கிறார். 

இந்தநிலையில், சற்குணம் இயக்கத்தில் விமல் - ஓவியா நடிக்கும் `கே-2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி, கஞ்சாகருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்பட பலர் நடிக்கிறார்கள். வர்மான்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சற்குணம் இந்த படத்தை இயக்கி, தயாரிக்கிறார். #Kalavani2 #K2 #Vemal #Oviyaa