சினிமா

வீரையன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இனிகோ பிரபாகரன், ஷைனி, கயல் வின்சென்ட் ஆகியோர் நடிப்பில் பரித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வீரையன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

இப்படத்தை பரித் இயக்கியுள்ளார். இவர் எழுத்தாளர் ‘கலைமாமணி’ கலைமணியிடம் உதவியாளராகவும், ‘கதிர்வேல்’ படத்தின் இணை இயக்குனராகவும், ’களவாணி’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். எஸ்.என்.அருணகிரி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி தஞ்சை மாவட்டம். கால ஓட்டத்தில் இது தடம் புறண்டு இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்ற பின்புலத்துடன் 90களில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறார் இயக்குனர்.