சினிமா

தீபிகா படுகோனே பேரழகி - இயக்குனர் வசந்தபாலன் புகழாரம்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘பத்மாவத்’ படத்தை பார்த்த இயக்குநர் வசந்த பாலன் தீபிகா படுகோனேவை பேரழகி என்று புகழ்ந்திருக்கிறார். மேலும் படக்குழுவையும் பாராட்டியிருக்கிறார். #Padmaavat #DeepikaPadukone

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகாபடுகோனே, ரன்வீர்சிங் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ‘பத்மாவத்’. பல்வேறு மாநிலங்களில் எழுந்த எதிர்ப்புகளுக்கிடையே இந்த படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த நிலையில், ‘பத்மாவத்’ படம் பார்த்த இயக்குனர் வசந்தபாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் இப்படி கூறியுள்ளார்...

‘சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘பத்மாவத்’ சரித்திர திரைப்படம் பார்த்தேன். படம் பற்றி கொழுந்து விட்டெரியும் பிரச்சினைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. திரையின் ஒவ்வொரு பிரேமையும் இயக்குனர் பன்சாலியும், ஒளிப்பதிவாளர் சுதீப் சட்டர்ஜியும் ஓவியங்களாக தீட்டியுள்ளார்கள்.

இந்த படம் ஒரு ஓவிய கண்காட்சியை கண்கொள்ளாமல் பார்த்தது போன்ற அற்புதமான அனுபவம். தீபிகாபடுகோனே இந்தியாவின் அத்தனை அழகையும் ஒருங்கமைப்பு செய்த பேரழகி. தீபிகாவின் ஒவ்வொரு அசைவுகளும் அழகும் அபிநயம் பிடிக்கிறது.

ஐஸ்வர்யாராய் பிளாஸ்டிக் அழகி, தீபிகா கவர்ச்சியும், காதலும் கலந்த பேரழகி. ரன்வீர்சிங் நடிப்பில் அத்தனை நயங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்கத்திலும், ஒளிப்பதிவிலும் இது நேர்த்தியான உன்னத படைப்பு’. #Padmaavat #DeepikaPadukone