சினிமா

வரலட்சுமியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி பெண்களை மையமாக வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பெண்களை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வருகின்ற வேளையில், அதிரடி, மர்மம், திரில்லர் கட்டமைப்பிலான படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. காதல் காட்சிகள் இன்றி அதிரடியான காட்சிகளும், திருப்பங்களும் கொண்டு புதிய பரிணாமத்தில் இருப்பதால், இந்த சவாலான கதாபாத்திரத்திற்கு வரலக்ஷ்மியை தேர்வு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கதைக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த படத்திற்கு பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய, `விக்ரம் வேதா' படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ். இப்படத்திற்கும் இசையமைக்கிறார். கலை இயக்குநராக டி.ராமலிங்கமும், இளையராஜா மற்றும் ஆனந்த் ஷ்ரவன் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொள்கின்றனர்.