இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ல் வெளியாக இருக்கிறது.
இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது.
இப்படத்தின் இரு டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லரை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. டப்பிங் பணிகளில் சிம்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் சிம்புவின் அறிமுக பாடலை 7 முறை தேசிய விருதுகளை வென்றுள்ள கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்.