சினிமா

உத்தரவு மகாராஜா

ஆஸிப் குரைஷி இயக்கத்தில் நகைச்சுவை கலந்த சைக்கோ திரில்லராக உருவாகி இருக்கும் உத்தரவு மகாராஜா படத்தின் முன்னோட்டம்.

‘திருநெல்வேலி’ படத்துக்குப் பிறகு பிரபு - உதயா மீண்டும் இதில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக சேரா, ஸ்ரீபிரியங்கா, மிஷாகோல் நடிக்கிறார்கள். இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன், மன்சூர் அலிகான், மனோ பாலா, அஜய் ரத்னம், குட்டி பத்மினி உள்பட பலர் நடிக்கிறார்கள்.உதயா 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - பாலாஜி ரங்கா, இசை - நரேன் பாலகுமார், எடிட்டிங் - டான் போஸ்கோ, ஸ்டண்ட் - தளபதி தினேஷ், நடனம் - சின்னிபிரகாஷ், இயக்கம் - ஆஸிப் குரைஷி. ஏராளமான விளம்பர படங்களை இயக்கிய இவர் தமிழ், இந்தி, பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....

“இது மற்ற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. நகைச்சுவை கலந்த சைக்கோ திரில்லர் கதை. பிரபு இது வரை நடிக்காத புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். உதயா இந்த படத்துக்காக உடல் எடையை குறைத்தும், மொட்டை அடித்தும், தாடி வைத்தும் 2 விதமான கெட்-அப்களில் நடிக்கிறார். மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் 2 பாடல்கள் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவுக்கு இது வித்தியாசமான கதையாக இருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்”என்றார்.