சினிமா

உதயநிதியின் `பொதுவாக எம்மனசு தங்கம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்திருக்கும் `பொதுவாக எம்மனசுல தங்கம்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி பிரபு இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்திருக்கும் படம் `பொதுவாக எம்மனசு தங்கம்'. ஸ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருகாயியிருக்கும் இப்படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் உதயநிதி முதல்முறையாக கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார். உதயநிதி நண்பனாக சூரியும், மயில்சாமி, நமோ நாராயணன், சுந்தர், ரமா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில், திருவிழா சம்பிரதாயங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையிலும், இளைஞர்கள் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்லாமல் தனது ஊரிலேயே அனைத்து வித தேவைகளையும் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகளுடன் தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் வெளியாக இருக்கிறது.

டி.இமான் இசையில் வெளியான பாடல்களும், சமீபத்தில் வெளியாகிய படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT