சினிமா

தேசிய விருது இயக்குநருடன் கைகோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்

தற்போது நடித்து வரும் இரு படங்களை முடித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக தேசிய விருது இயக்குநருடன் இணைவிருக்கிறார்.

தமிழில் வெளியான `காஞ்சிவரம்' என்ற படத்திற்காக தேசிய விருது வென்ற பிரியதர்ஷன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் உதயநிதி நடிக்க இருக்கிறார். இதுகுறித்த தகவலை உதயநிதியே அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

"தனது அடுத்த படத்தில் பிரியதர்ஷனின் இயக்கத்தில் நடிக்க இருப்பதில் மகிழ்ச்சி. அந்த படத்தை மூன்ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட் நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்க இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.