சினிமா

பொங்கலுக்கு 3 படங்கள் ரிலீஸ் - 3 படங்கள் விலகல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 முதல் 7 படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 3 படங்கள் பொங்கல் ரேசில் இருந்து பின்வாங்கி இருக்கின்றன. #TSK #Sketch #Gulebagavali

ஜனவரி 14-ந்தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்', விக்ரமின் `ஸ்கெட்ச்', பிரபுதேவாவின்  `குலேபகாவலி' உள்ளிட்ட மூன்று படங்கள் ரசிகர்களுக்கு விருந்தளிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. 

இதுதவிர அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்', சண்முக பாண்டியன் நடிப்பில் `மதுர வீரன்', விமல் நடிப்பில் `மன்னர் வகையறா' உள்ளிட்ட படங்களும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரவிந்த் சாமியின் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படம் பொங்கல் ரேசில் இருந்து விலகியது.

அதைத் தொடர்ந்து `மதுர வீரன்', `மன்னர் வகையறா' உள்ளிட்ட படங்களும் பொங்கல் ரேசில் இருந்து தற்போது விலகியிருக்கிறது. படத்தை வெளியிட போதிய திரையரங்கு கிடைக்காததால் இந்த இரு படங்களும் விலகியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து இந்த இரு படங்களின் போஸ்டர்களிலும் ஜனவரி வெளியீடு என்று மாற்றப்பட்டிருக்கிறது. எனவே பொங்கல் பண்டிகையில் 3 படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக வருகிறது உறுதியாகி இருக்கிறது. #TSK #Sketch #Gulebagavali

SCROLL FOR NEXT