சினிமா

ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் நடிகை திரிஷா ஒப்பந்தமாகிய நிலையில், அந்த படத்திற்காக திரிஷா தனது சிகை தோற்றத்தை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth165 #Trisha

ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். வடஇந்தியாவில் படமாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வந்த நிலையில், நடிகை திரிஷாவும் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் தமிழ் சினிமாவில் ரஜினியுடன் மட்டும் இணையாத, நடிகை திரிஷாவின் கனவு தற்போது நனவாகி இருக்கிறது. நாயகியாக அறிமுகமாகிய 16 வருடங்களுக்கு பிறகு திரிஷா, ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.

இந்த நிலையில், தனது முடியின் அழகை மாற்றம் செய்து கொண்ட திரிஷா அந்த புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திரிஷாவின் இந்த புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது ரஜினி படத்திற்கானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திரிஷா இந்த படத்தில் ரஜினியின் காதலியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டு முதல் பாதியில் திரைக்கு வருகிறது. #Rajinikanth165 #Trisha

SCROLL FOR NEXT