தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான `தமிழ் படம்' படத்தின் இரண்டாவது பாகம் `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.
சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த பாகம் ஒரு போலீஸ் அத்தியாயமாக உருவாகி இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. படம் விரைவில் வெளியாக இருக்கிறது. #TP2Point0 #TamizhPadam2