சினிமா

காதலில் மூழ்க வைக்க மீண்டும் வருகிறது டைட்டானிக்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக ரசிகர்களை கவர்ந்து, பல ஆஸ்கார் விருதுகளையும், வசூலில் சாதனை படைத்த படமுமான ‘டைட்டானிக்’ மீண்டும் புதிய தொழில் நுட்பத்துடன் ரிலீசாகிறது.

இதற்காகவே டைட்டானிக் கதை திரைப்படமாக 1997ம் ஆண்டு வெளிவந்தது. இப்படம் வெளியாகி உலக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. நிஜக்கதை என்பதால் மிகப் பிரபலமடைந்தது. இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருந்தார். இதில் லியோனார்டோ டிகாப்ரியோ கதாநாயகனாகவும், கேட் வின்ஸ்லெட் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள்.

இப்படம் 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட 11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றது. இதுவரை அதிகமான ஆஸ்கர்களைக் குவித்த ‘பென்ஹர்’ படத்துடன் அதே 11 விருதுகள் பெற்று சமன் செய்தது டைட்டானிக். அதே போல அந்தக் காலகட்டத்தில் உலகில் அதிக வசூல் என்கிற சாதனையையும் செய்தது.

SCROLL FOR NEXT