சினிமா

‘தொண்டன்’ படம் பார்க்கவந்த பொதுமக்களுக்கு இலவச நீர்மோர், இளநீர் கொடுத்து அசத்திய ரசிகர்கள்

சமுத்திரகனி நடிப்பு, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘தொண்டன்’ படத்தை பார்க்க வரும் பொதுமக்களுக்கு ரசிகர்கள் இலவச நீர் மேர், இளநீர் கொடுத்து அசத்தியுள்ளனர்.

‘அப்பா’ படத்திற்கு பிறகு சமுத்திரகனி இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. திரையரங்கிலும் ரசிகர்கள் ரொம்பவும் ஆர்வமுடன் வந்து படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.

சென்னையில் முக்கியமான திரையரங்கமாக கருதப்படும் உதயம் திரையரங்கில் ‘தொண்டன்’ படம் திரையிடப்பட்டிருக்கிறது. படத்தை பார்க்க வந்த பொதுமக்களுக்கு ‘தொண்டன்’ படத்தின் ரசிகர்கள் இலவசமாக நீர் மோரும், இளநீரும் வழங்கினர். ‘தொண்டன்’ ரசிகர்களின் இந்த செயலுக்கு பொதுமக்களிடையே பாராட்டுக்களும் கிடைத்துள்ளது.