சினிமா

`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

சுசி கணேஷன் இயக்கத்தில் பாபி சிம்ஹா - பிரசன்னா - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருட்டுபயலே-2' வருகிற நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சுசி கணஷேன் இயக்கியிருக்கும் `திருட்டுபயலே-2' படத்தில் பாபி சிம்ஹா - பிரசன்னா - அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சனம் ஷெட்டி, விவேக், ரோபோ ஷங்கர், தமீம் அன்சாரி, ஆடம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வித்யாசாகர் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கிறார்.