சினிமா

நிரம்பி வழியும் திரையரங்குகள்: `விவேகம்' கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் `விவேகம்' படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் திரையரங்குகள் முழுவதும் நிரம்பி வழிகிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விவேகம் படத்திற்கு முதல் நாளான இன்று நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல்வேறு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இரவு முழுவதும் அஜித் ரசிகர்கள் கண்விழித்துக் கொண்டு ஆவலுடன் படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

ஜி.எஸ்.டி, மாநில என பல வரிகளுடன் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் அலைமோதி வருகிறது.

SCROLL FOR NEXT