டிஜிட்டல் பிரச்சனை காரணமாக மார்ச் 1ம் தேதி முதல் புதுப்படங்கள் ஏதும் வெளியிடாமல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் பழைய படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு வந்தது. இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி கடந்த 16ம் தேதி முதல் திரையரங்குகளை காலவரையின்றி மூடி வருகின்றனர். இதனால், திரையுலகம் முடங்கியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்துள்ளனர். 8% கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை திரையரங்கத்தை புதுப்பிக்கும் முறையை 3 ஆண்டுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
முதலமைச்சருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பின் போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார்.