பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘'சிட்டுக்குறிஞ்சி’. படத்தின் இசைவெளியீட்டு விழாவானது நடைப்பெற்றது.
ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களத்தில், இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவை பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் மாரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஹங்கேரியைச் சேர்ந்த புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவினரும் பங்களித்துள்ளனர்.
கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகளை உருவாக்கிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பேசுகையில், தனது கல்லூரி நாட்களில் ‘இளங்கதிர்’ கையெழுத்துப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார். ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி தன்னை இயக்குவதாகக் குறிப்பிட்டார். பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 20 ஆண்டுகாலப் பயணம் பல்வேறு சவால்களும் போராட்டங்களும் நிறைந்ததாக இருந்ததாகத் தெரிவித்தார்.
படத்தின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருப்பதாகவும், அந்தப் பயணத்தை ஊடகங்களின் ஆதரவுடன்தான் கடக்க முடியும் என்றும் கூறி, அனைவரின் பேராதரவையும் கேட்டுக்கொண்டார்.
நடிகர் தோழர் எல்.வி. ஆதவன் பேசுகையில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கடின உழைப்பைப் பாராட்டினார்.
‘சிட்டுக்குறிஞ்சி’ என்ற அழகான தமிழ்ப் பெயரைப் படத்திற்குச் சூட்டியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
வாத்தியாரால் மாணவர்களுக்குப் பெருமை இல்லை; மாணவரால்தான் வாத்தியாருக்குப் பெருமை” என்று குறிப்பிட்ட அவர், இப்படம் முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகியுள்ளதால் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், வித்தியாசமான ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களம், பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள் மற்றும் புடாபெஸ்ட் இசைக்குழுவின் பங்களிப்பு ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.