உறியடி திரைப்படத்தில் புகழ் கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றிருந்த விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'அறிவு' (Arivu) திரைப்படம், வருகிற டிசம்பர் 11, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படமானது டிசம்பர் 11, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மலைக்கிராமங்களில் கல்வியைக் கொண்டு சேர்க்கும் ஒரு பள்ளி ஆசிரியராக விஜயகுமார் இப்படத்தில் நடித்துள்ளார்.
'கழுகு' பட புகழ் சத்யசிவா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மூவிட்ரான் புரொடக்ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
அறிவு திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலில் அறிவிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் நிறைவடைந்தது. இப்படத்திற்கு நிகேஷ் ஆர்.எஸ், இயக்குநருடன் இணைந்து வசனங்களை எழுதியுள்ளார்.
விஜயகுமாருடன் கயல் ஆனந்தி, சுபிக்ஷா குமார், ஜோஷிகா மாயா, இஸ்மத் பானு, சிங்கம்புலி, ஐ.எம். விஜயன் மற்றும் தீபா சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்ய, வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.