சினிமா

விஜய் நடிக்கும் தளபதி 63 படப்பிடிப்பில் விபத்து - ஒருவர் படுகாயம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Thalapathy63 #Vijay

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படமாகிறது.

படப்பிடிப்பு தளத்தில் 100 அடி உயரத்தில் கிரேனில் தொங்கவிடப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்தததில், அங்கிருந்த தொழிலாளி செல்வராஜ் (52) என்பவருக்கு காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Thalapathy63 #Vijay #Nayanthara