இதனால் தற்போது இந்த நடிகர்களின் படங்களை மலையாளம், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடுவதில் அங்குள்ள விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதுபோல் தெலுங்கு நடிகர்கள் தமிழ் படங்களில் நடித்து இங்குள்ள மார்க்கெட்டை பிடிக்க தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர்.
முன்னணி தமிழ் கதாநாயகர்களின் படங்கள் ரூ.100 கோடிகளை தாண்டி வசூல் குவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தெலுங்கு நடிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் படங்களில் தடம்பதிக்க தயாராகி வருகிறார்கள்.
ஏற்கனவே மறைந்த பழம்பெரும் தெலுங்கு நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ் ஆகியோர் தமிழ் படங்களில் நடித்துள்ளனர். இதுபோல் நாகார்ஜுனாவும் தமிழில் நடித்துள்ளார். தற்போதுள்ள இளம் கதாநாயகர்களும் தமிழுக்கு வருகிறார்கள். பிரபாஸ்,ராணா நடித்த பாகுபலி முதல் பாகமும் இரண்டாம் பாகமும் தமிழில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.