செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் சாய் பல்லவி நடித்த ‘பிடா’ படமும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சாய் பல்லவி மீது கரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள இளம் தெலுங்கு நடிகர் நாக சவுரியா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “சாய் பல்லவியை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. படப்பிடிப்பில் அவரது நடவடிக்கைகள் சரியாக இல்லை. முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். சிறுசிறு விஷயங்களுக்கு கோபப்பட்டார். தெலுங்கில் சாய் பல்லவி நடித்த பிடா படம் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு சாய் பல்லவி காரணம் இல்லை” என்றார்.