சினிமா

மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்கும் தமிழ்ப்படம் 2.0 படக்குழு

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்ப்படம் 2.0' படக்குழு மகளிர் தினத்தில் சிறப்பு விருந்தளிக்க முடிவு செய்திருக்கிறது. #TamizhPadam2point0 #TP2Point0

மாலை மலர்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தமிழ்ப்படம்' படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. 

சிவா,  ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் திஷா பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் படக்குழு மலேசியா சென்றது. அங்கு பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், இந்த படத்தில் இருந்து ரொமேண்டிக் சிங்கிள் ஒன்று மகளிர் தினத்தை முன்னிட்டு வருகிற நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை நடிகர் மாதவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் காலை 9 மணிக்கு வெளியிடுகிறார். இந்த படத்திற்கு என்.கண்ணன் இசையமைத்திருக்கிறார்.  

`விக்ரம் வேதா' படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும் அவர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். படம் வருகிற ஜூலை மாதமட ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #TamizhPadam2point0 #TP2Single #TP2Point0