அமீர்கான், ஜுனைத் கான் 
சினிமா

அமீர்கான் மகனுக்கு ஜோடியாகும் இளம் நடிகை

அமீர் கான் மகன் நடிக்கும் புதிய படத்தில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்த இளம் நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

தற்போது ஷாலினி பாண்டே அமீர்கானின் மகன் ஜுனைத் கான் அறிமுகமாகும் மகாராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ஜுனைத் கான், ஷாலினி பாண்டே

இந்த படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சித்தார்த் மல்ஹோத்ரா இயக்குகிறார். 1982ம் ஆண்டு நடந்த பிரிஜ்நாத்ஜி மகராஜ் வழக்கை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது. இதில் ஜுனைத் கான் பத்திரிகையாளராக நடிக்கிறார். ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.