விஜய் சேதுபதி 
சினிமா

நேரடியாக டி.வி.யில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் இப்படம் இன்னும் வெளியாகாமல் இருந்து வந்தது. இதனால் படக்குழுவினர் ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் தேதி இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

SCROLL FOR NEXT