விஜய் குமார் 
சினிமா

புதிய படத்தை தொடங்கிய உறியடி விஜய் குமார்

உறியடி, உறியடி 2 படங்களை எழுதி, இயக்கி, நடித்த விஜய் குமார், தன்னுடைய உதவி இயக்குனர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்கிறார். அறிமுக இயக்குனரான அப்பாஸ், உறியடி படத்தின் இரு பாகங்களிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ஆவார்.

படக்குழுவினருடன் விஜய் குமார்

விஜய் குமாருக்கு ஜோடியாக அர்ஷா எனும் நடிகை அறிமுகமாகிறார். இவர்களுடன் நடிகர்கள் சங்கர் தாஸ், அவினாஷ் , கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

லைஃப்ஸ்டைல் ஆக்சன் டிராமா வகையில் தயாராகும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடை பெற இருக்கின்றது.