விஜய் 
சினிமா

கொரோனாவால் தாமதமாகும் படப்பிடிப்பு.... ரிலீஸ் பிளானை மாற்றிய ‘தளபதி 65’ படக்குழு

கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாவதால், ‘தளபதி 65’ படக்குழு ரிலீஸ் பிளானை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

விஜய்

இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாவதால், ரிலீஸ் பிளானை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய தகவல்படி தளபதி 65 படத்தை அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டன்று வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.