கே.வி.ஆனந்த் 
சினிமா

கே.வி.ஆனந்த் சாருடன் வேலை பார்த்தது என்னுடைய அதிர்ஷ்டம்.. பிரபல நடிகை உருக்கம்

திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவிற்கு பிரபல நடிகை ஒருவர் சமூக வலைத்தளத்தில் இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் அயன் படத்தில் கதாநாயகியாக நடித்த தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில், புகழ்பெற்ற கே.வி.ஆனந்த் சாருடன் பணிபுரியும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி. எனது தமிழ் திரை படங்களில் மறக்கமுடியாத திரைப்படத்தை எனக்குக் கொடுத்தார். ஐயா, நீங்கள் ஈடுசெய்ய முடியாதவர். குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி என்று உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.