உதயநிதியிடம் பணம் கொடுக்கும் சூரி 
சினிமா

மகள், மகன் சார்பில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய சூரி

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நடிகர்கள் இயக்குனர்கள் பலரும் நிதியுதவி வழங்கி வரும் நிலையில் நடிகர் சூரி தன்னுடைய மகன், மகள் சார்பில் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.

முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா, லிங்குசாமி ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர். 

உதயநிதியிடம் காசோலை வழங்கும் சூரி

இந்நிலையில் நடிகர் சூரி ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், மேலும் தன் மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார்.