சந்தானம் 
சினிமா

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் சந்தானம் படம்

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ஒன்று அடுத்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் கைவசம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், சபாபதி என ஏராளமான படங்கள் உள்ளன. 

இதில் சபாபதி படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்த மாதம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபாபதி படத்தின் போஸ்டர்

‘சபாபதி’ படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.