வனிதா, சஞ்சீவ், 
சினிமா

சஞ்சீவ் - வனிதா இடையே இருக்கும் உறவுமுறை... ஷாக்கான ரசிகர்கள்

நடிகை வனிதா விஜயகுமார், நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, தங்களுக்கு இடையேயான உறவுமுறையைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் சஞ்சீவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த அவர் 'என்னுடைய சகோதரர்' என்று குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் ’சஞ்சீவ் எப்படி உங்களுக்கு சகோதரர் ஆவார்'? என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு வனிதா ’தன்னுடைய தாயார் மஞ்சுளாவின் சகோதரி ஷ்யாமளா மகன் தான் சஞ்சீவ் என்றும், அதனால் சஞ்சீவ் எனக்கு சகோதரர் தான்' என்று குறிப்பிட்டுள்ளார். 

வனிதாவுக்கும் சஞ்சீவ்க்கும் இடையே அக்கா-தம்பி உறவு என்பது தற்போது பலருக்கும் தெரிந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்பட்டும் இன்ப அதிர்ச்சி அடைந்தும் வருகின்றனர்.

SCROLL FOR NEXT