'மன்னர் வகையறா' படத்தை தயாரிக்க, என்னிடம் விமல், 50 லட்சம் ரூபாய் கேட்டார். என் வீட்டை அடமானம் வைத்து, பணம் கொடுத்தேன். அதற்காக எனக்கு, 80 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்த நிலையில், விமல் சொன்ன தேதியில், காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணமில்லாமல் திரும்பியது.
இது குறித்து பலமுறை, விமலிடம் முறையிட்டபோதும், பணத்தை தரவில்லை. என் வீட்டை விற்று, கடனை அடைத்தேன். விமலுக்கு உதவப் போய், தற்போது நடுத்தெருவில் நிற்கிறேன். இந்நிலையில், தி.மு.க., சார்பில், விமலின் மனைவி, மணப்பாறையில் போட்டியிட போவதாக தகவல் அறிந்தேன். 'ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு' என, என்னைப் போன்றவர்கள் நம்பியுள்ள வேளையில், மோசடியின் மொத்த உருவமாய் திகழும் விமலுக்காக, அவரது மனைவிக்கு, 'சீட்' கொடுப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.