நரகாசூரன் படத்தில் அரவிந்த் சாமி - சந்தீப் கிஷன் 
சினிமா

முடிவுக்கு வந்தது நரகாசூரன்... விரைவில் ஓடிடியில் ரிலீஸ்

'துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான 'நரகாசூரன்' படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

பைனான்ஸ் சிக்கலால், இன்னும் இந்தப் படம் வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் விலகிவிட்டார். பல முறை இந்தப் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக ஓடிடி வெளியீட்டுக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், எதுவுமே சுமுகமாக முடியவில்லை.

தற்போது, 'நரகாசூரன்' திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்க இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT