நெப்போலியன் 
சினிமா

பிரபல ஹீரோவுக்கு தாத்தாவாக நடிக்கும் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில், பிரபல நடிகருக்கு தாத்தாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் அன்பறிவு. இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடிக்கிறார். அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிகர் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் நெப்போலியன், இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தாத்தாவாக நடிக்கிறாராம். கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக அன்பறிவு உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.