மகத்தும் பிரபல மாடல் ஆழகி பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இதில் மகத்தின் நண்பர் சிம்பு உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
இன்று திருமண நாள் கொண்டாடும் இவர்கள், ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர். பிராச்சியின் வயிற்றை முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்ட மகத், "நாங்கள் இருவரும் அழகிய குழந்தையால் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம். இந்த வருடம் மே மாதத்தில் எங்கள் குழந்தை வருகிறது. இந்த சிறந்த பரிசுக்கு நன்றி பிராச்சி மிஸ்ரா. லவ் யூ" என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.