அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மகத். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார். இவர் பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நடிகர் மகத் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படங்கள்
கடந்த ஜூன் 7-ம் தேதி மகத் - பிராச்சி தம்பதிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில், தற்போது அந்த குழந்தைக்கு ‘அதியமான் ராகவேந்திரா’ என பெயர் சூட்டி உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மகத், குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.