மாதவன் 
சினிமா

ரீமேக் படத்தில் பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்கும் மாதவன்?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் மாதவன், ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தற்போது ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிரஞ்சீவி, மாதவன்

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.