லாபம் படத்தில் விஜய் சேதுபதி 
சினிமா

எஸ்.பி.ஜனநாதனுக்கு பாடலை சமர்ப்பிக்கும் லாபம் படக்குழுவினர்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாபம் படக்குழுவினர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், யாழா யாழா என்ற முதல் சிங்கில் பாடலும் டிரெண்டிங்கில் இடம்பெற்றது.

தற்போது நாளை மாலை 6 மணிக்கு லாபம் படத்தின் 2 வது சிங்கில் ரிலீசாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்பாடல் இப்படத்தின் இயக்குநர் மறைந்த எஸ்.பி.ஜனநாதனுக்கு சமர்பிப்பதாக படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள்.