விஜய் ஆண்டனி 
சினிமா

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அரசியல் திரில்லர் கதையம்சத்தில் உருவாகி உள்ள ‘கோடியில் ஒருவன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

மாலை மலர்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் உள்ளன. இவற்றுள் ‘கோடியில் ஒருவன்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி உள்ளார். 

இந்நிலையில், கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற செப் 17-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோடியில் ஒருவன் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

அரசியல் திரில்லர் கதையம்சத்தில் உருவாகி உள்ள, இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தை டிடி ராஜா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.