கார்த்திக் நரேன், புராஜெக்ட் அக்னி குறும்படத்தின் போஸ்டர் 
சினிமா

நவரசாவின் ‘புராஜெக்ட் அக்னி’ முழுநீள படமாகிறதா? - கார்த்திக் நரேன் சூசக பதில்

மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்திருந்த நவரசா ஆந்தாலஜி படம், நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.

மாலை மலர்

துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசூரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் சமீபத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜியில் ‘புராஜெக்ட் அக்னி’ என்கிற குறும்படத்தை இயக்கி இருந்தார். அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா நடிப்பில் வெளியாகி இருந்த இந்த குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

ஹாலிவுட் பட ரேஞ்சில் இருந்ததாக பாராட்டுக்களும் கிடைத்தன. இப்படத்தை முழு நீள படமாக எடுக்குமாறு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக கார்த்திக் நரேனுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

கார்த்திக் நரேனின் டுவிட்டர் பதிவு

இந்நிலையில், “புராஜெக்ட் அக்னிக்கு மாபெரும் வரவேற்பை அளித்த ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. விஷ்ணு, கிருஷ்ணா, கல்கி ஆகியோரின் பயணம் இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கார்த்திக் நரேன். 

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புராஜெக்ட் அக்னி குறும்படத்தை முழு நீள படமாக இயக்க உள்ளதைத் தான் அவர் இவ்வாறு சூசகமாக தெரிவித்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.