கே.வி.ஆனந்த், கமல்ஹாசன் 
சினிமா

கே.வி.ஆனந்த் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. இவர் அயன், மாற்றான், கோ, அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு  சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.