ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் 
சினிமா

தனுஷின் ஜகமே தந்திரம் படைத்த சாதனை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.

இப்படம் 16 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, 190 நாடுகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் உலக அளவில் அதிகப் பார்வையாளர்களை பெற்ற படம் என நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த சாதனையை தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.