ஐஸ்வர்யா மேனன் 
சினிமா

தெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்

தமிழில் வீரா, தமிழ்படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா மேனன், தற்போது தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை நகினா திரிநாதராவ் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா மேனன் தவிர்த்து, ஸ்ரீலீலா என்பவரும் இன்னொரு கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு கோடை விடுமுறையில் தொடங்க உள்ளதாம்.

SCROLL FOR NEXT