ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி 
சினிமா

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பேச்சிலர்’ படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்

சதிஸ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள பேச்சிலர் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜி.வி.பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது ‘பேச்சிலர்’ படம் தயாராகி வருகிறது. டில்லிபாபு தயாரித்துள்ள இப்படத்தை சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இளம் நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பேச்சிலர் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

இப்படத்திற்கு முதலில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில், திடீரென இசையமைப்பாளரை மாற்றி உள்ளனர். ஜி.வி.பிரகாஷுக்கு பதிலாக திபு நினன் தாமஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே மரகத நாணயம், கனா ஆகிய தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திபு நினன் தாமஸ் இசையில் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் என ‘பேச்சிலர்’ படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT