மகத் - ஐஸ்வர்யா தத்தா 
சினிமா

மகத், ஐஸ்வர்யா தத்தா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான மகத் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்திருக்கிறார்.

இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். தற்போது இவர்களுடன் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு இணைந்திருக்கிறார். இப்படத்தில் புதையலை தேடும் கடற்கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) வாக நடிக்கிறார். 

 இப்படத்தினை இயக்குநர் பிரபு ராம் சி இயக்கியுள்ளார். படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.