கவுதம் மேனன் - மோகன் ஜி 
சினிமா

கவுதம் மேனனை தொடர்ந்து திரெளபதி இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

திரௌபதி இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ருத்ர தாண்டம் படத்தில் கவுதம் மேனனை தொடர்ந்து பிரபல நடிகர் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக இயக்கும் படம் ‘ருத்ர தாண்டவம்’. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

சமீபத்தில் இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ராதாரவி இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.