இயக்குனர் ராஜு முருகனின் அண்ணன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன் அவர்களின் அண்ணன் குரு என்பவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இவர் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.