இயக்குனர் கதிர் 
சினிமா

19 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘காதல் தேசம்’ இயக்குனர்

இயக்குனர் கதிர் இயக்கிய ‘இதயம்’, ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.

முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். இதையடுத்து ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ போன்ற படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழில் இவர் கடைசியாக இயக்கிய படம் காதல் வைரஸ். 2002-ம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து அவர் படங்களை இயக்கவில்லை.

நடிகர் கிஷோர், இயக்குனர் கதிர்

இந்நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார் இயக்குனர் கதிர். அவர் இயக்கும் புதிய படத்தில் புதுமுக நாயகன் கிஷோர் நடிக்க உள்ளார். ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT