செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வணங்காமுடி’. இதில் சிம்ரன், நந்திதா ஸ்வேதா, ரித்திகா சிங், சாந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் 2017-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்படத்தில் அரவிந்த் சாமி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்த படம் குறித்த அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. தற்போது இப்படத்தை பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.